தமிழக செய்திகள்

கெட்டுப்போன இறைச்சியை விற்றால் கடும் நடவடிக்கை

கெட்டுப்போன இறைச்சியை விற்றால் கடும் நடவடிக்கை என அதிகாரிகள் கூறினர்.

தினத்தந்தி

தாயில்பட்டி, 

உணவு பாதுகாப்பு துறைக்கு வந்த புகார்களின் அடிப்படையிலும், கலெக்டர் உத்தரவின் படியும், மாவட்ட நியமன அலுவலர் வழிகாட்டுதலின் படியும் ஏழாயிரம்பண்ணையில் இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மோகன்குமார், வெங்கடேஷ்வரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது ஒரு கடையின் பின்புறம் பூட்டியிருந்த வீட்டில் கெட்டுப்போன ஆட்டு இறைச்சி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்படி வீட்டை திறந்து பார்த்த போது அங்கு கெட்டுப்போன 65 கிலோ இறைச்சி இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்ததுடன், கடையின் உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர். இனிவரும் காலங்களில் கெட்டுப்போன இறைச்சியை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து