தமிழக செய்திகள்

தமிழ்ப்புத்தாண்டையொட்டி பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிப்பு

தமிழ்ப்புத்தாண்டையொட்டி பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளன.

தினத்தந்தி

திருப்பத்தூர்,

பிரசித்தி பெற்ற கோவில்களில் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலும் ஒன்றாகும். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இந்த கோவிலுக்கு நாளை(புதன்கிழமை) தமிழ் புத்தாண்டு என்பதால் பக்தர்கள் அதிகமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தாண்டையொட்டி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிள்ளையார்பட்டி கோவில் நிர்வாகம் சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக கோவில் அறங்காவலர்கள் காரைக்குடி ராமசாமி செட்டியார், வலையபட்டி நாகப்பச்செட்டியார் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சமூக இடைவெளி பின்பற்றாதவர்கள், முக கவசம் அணியாதவர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லை. 65 வயதுக்கு மேற்பட்டோர், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், சுவாசம் தொடர்பான நோய், இதய நோய் உள்ளிட்ட நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு உட்பட்டோர் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். கோவில் வளாகத்திற்கு உள்ளேயும், வெளியேயும், சிற்றுண்டிச் சாலைகளிலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

தேங்காய், பூ, பழம் கொண்டு வருவதையும் தவிர்க்க வேண்டும். கோவில் திருவிழா போன்றவற்றில் அரசின் இயக்க நடைமுறை அமலில் இருப்பதால், கோவில் வழக்கப்படியும், ஆகம விதிகள்படியும், பூஜைகள் நடைபெறும். பூஜைகளில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பூஜைகள் முடிந்த பின்னர் சாமி தரிசனம் செய்ய மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சாமி தரிசனம் செய்து முடிந்த பின்னர் பக்தர்கள் தங்கி இளைப்பாற அனுமதி இல்லை. 5 பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்