கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

ஜூன் 7-9 ந்தேதி வரை வேலை நிறுத்தம்: ரேசன் கடை ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு..!

ஜூன் மாதம் 7 முதல் 9-ந்தேதி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ரேசன் கடை ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

நாகை,

அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வருகிற ஜூன் மாதம் 7 முதல் 9-ந்தேதி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக நியாயவிலைக் கடை பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நாகையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிறகு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க போராட்டக்குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கு. பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், 'ஜூன் 10-ந் தேதி மாநிலம் முழுவதும் பணியாளர்களைத் திரட்டி, சென்னையில் தமிழக முதல் அமைச்சரை சந்திப்பதற்கான காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தோடு இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஜூன் மாதம் 7,8,9 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது' என்று கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு