தமிழக செய்திகள்

சேலம் சூரமங்கலத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

சேலம் சூரமங்கலத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

சூரமங்கலம்

சேலம் அருகே உள்ள முருங்கப்பட்டியில் கடந்த மாதம் மக்கள் குறை தீர்க்கும் முகாம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. இதில் திடீரென மேடை சரிந்து விழுந்தது. இதையடுத்து கவன குறைவாக இருந்ததாக முருகங்கப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் அவரது பணி இடைநீக்கத்தை திரும்ப பெறக் கோரி சூரங்கலத்தில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். இதில் மாநில துணைத்தலைவர் நல்லாக்கவுண்டர் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்