தமிழக செய்திகள்

மாணவ-மாணவிகள் சாதனை

திருவேங்கடம் கலைவாணி மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை

தினத்தந்தி

திருவேங்கடம்:

தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் உள்ள ஸ்ரீகலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் பதினொன்றாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். பதினொன்றாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை பள்ளியின் சார்பில் 232 மாணவ-மாணவிகள் எழுதினர். 232 பேரும் தேர்ச்சி பெற்று 100 சதவீத தேர்ச்சி பெற்றும் சாதனை படைத்தனர்.

மாணவி சி.மாரிச்செல்வி 600-க்கு 587 மதிப்பெண்களை பெற்று சிறப்பிடம் பெற்றார். மாணவி ப.யுரேகா 582 மதிப்பெண்களையும, மாணவர் சீ.மோகன்குமார் 570 மதிப்பெண்களையும் பெற்று சாதனை படைத்தனர். தமிழில் 100-க்கு 99 மதிப்பெண்களை 7 பேரும், ஆங்கிலத்தில் 97 மதிப்பெண்களை இரண்டு பேரும், கணிதத்தில் 100 மதிப்பெண்களை ஒருவரும், இயற்பியல் பாடத்தில் 100 மதிப்பெண்களை 5 பேரும், வேதியியலில் ஒருவரும், உயிரியலில் 99 மதிப்பெண்களை ஒருவரும், கணினி அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண்களை 3 பேரும், கணினி பயன்பாட்டு அறிவியலில் 100 மதிப்பெண்கள் ஒருவரும், வணிகவியலில் 96 மதிப்பெண்களை ஒருவரும் பெற்றனர்.

சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளரும், முதல்வருமான வி.பொன்னழகன் என்ற கண்ணன் மற்றும் ஆசிரிய- ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு