தமிழக செய்திகள்

‘நர்சிங்' படிப்புக்கும் நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை; தேசிய தேர்வு முகமை அறிவிப்பால் மாணவ-மாணவிகள் அதிர்ச்சி

நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என்ற தேசிய தேர்வு முகமையின் அறிவிப்பால், மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தினத்தந்தி

நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த தேர்வில் மாணவ-மாணவிகள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. அந்தவகையில் நடப்பாண்டுக்கான நீட் தேர்வு எப்போது வெளியாகும்? என்று மாணவ-மாணவிகள் அனைவரும் எதிர்பார்த்து இருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தேர்வை நடத்தக்கூடிய தேசிய தேர்வு முகமை தேர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது.

அந்த அறிவிப்பில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., பி.எஸ்.எம்.எஸ்., பி.யு.எம்.எஸ். மற்றும் பி.எச்.எம்.எஸ். போன்ற மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு நீட் தேர்வு வருகிற ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி நடைபெறும். மேலும், மத்திய-மாநில அரசுகளின் பிற நிறுவனங்கள் விதிமுறைகள், வழிகாட்டுதல்களின் படி பி.எஸ்.சி. நர்சிங் படிப்புக்கும், பி.எஸ்.சி. வாழ்வியல் அறிவியல் படிப்புக்கும் நீட் தேர்வு மதிப்பெண்ணை பயன்படுத்தி மாணவர் சேர்க்கையை நடத்தலாம்' என்று தெரிவித்துள்ளது.

அதிர்ச்சி

ஏற்கனவே மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தப்படுவதை எதிர்த்து, தமிழ்நாட்டு விலக்கு அளிக்க அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது நர்சிங் படிப்புகளுக்கும் நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை என்பது மாணவ-மாணவிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நர்சிங் படிப்புகளை பெரும்பாலும் கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவ-மாணவிகள் அதிகளவில் விரும்பி படித்து வருகின்றனர். அவர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. தேசிய தேர்வு முகமை இவ்வாறு அறிவித்து இருப்பதற்கு கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். இதுதொடர்பாக பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், எண்ணற்ற தியாகிகளின் கடும் உழைப்பால், இடைவிடாத போராட்டங்களால் கிடைத்த உயர்கல்வி வாய்ப்பினை, நீட் மூலம் வடிகட்டி, மத்திய அரசு பறிக்கத்

துடிப்பதை அனுமதிக்க முடியாது' என்று தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து