தமிழக செய்திகள்

பி.எட், எம்.எட். படிப்பு சேர்க்கைக்கு காலஅவகாசம் நீட்டிப்பு

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பி.எட், எம்.எட். படிப்பு சேர்க்கைக்கு காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

தஞ்சாவூர்;

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் இளங்கல்வியியல் (பி.எட்.) இரண்டாமாண்டு முழுநேரப் பட்டப்படிப்பு மற்றும் கல்வியியல் நிறைஞர் (எம்.எட்.) இரண்டாமாண்டு முழுநேரப் பட்டப்படிப்பிற்கு 2023-2024-ம் கல்வியாண்டிற்கான நேரடிச் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சேர்க்கை விண்ணப்பங்களை காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் நேரிலும், தமிழ்ப் பல்கலைக்கழக இணையவழியாகவும் பெற்றுக் கொள்ளலாம். சேர்க்கைக்கு ஒருசில இடங்களே எஞ்சி உள்ள நிலையில் விரைந்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையத்தளமான www.tamiluniversity.ac.in என்ற முகவரியிலும், 04362-226720 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனவும் பதிவாளர் (பொறுப்பு) தியாகராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து