தமிழக செய்திகள்

பணகுடியில் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

பணகுடியில் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

பணகுடி:

பணகுடியில் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளி மாணவி

பணகுடி நெருஞ்சி காலனியை சேர்ந்தவர் செல்வின் கூலித்தொழிலாளி. இவருடைய மகள் சக்தி தனுசியா (வயது 14). இவர் பணகுடியில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

சம்பவத்தன்று சக்தி தனுசியாவின் தந்தை வேலைக்கு போய்விட்டார். தாயார் வெளியூர் சென்றிருந்தார். தனியாக இருந்த சக்திதனுசியா வீட்டு படுக்கை அறையிலுள்ள இரும்பு கம்பியில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார்.

மாலையில் வீட்டிற்கு வந்த பெற்றோர் மகள் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மகளை பணகுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த டாக்டர், இறந்துவிட்டதாக கூறினார்.

இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இறந்து போன சக்தி தனுசியா உடலை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...