தமிழக செய்திகள்

8-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

நெல்லை அருகே 8-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

நெல்லை பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரம் அருகே உள்ள ஜெயஜோதி நகரை சேர்ந்தவர் மாரியப்பன். டெய்லர். இவருடைய மகள் ஸ்ரீரிக்ஷயா (வயது 13). இவர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று காலையில் வீட்டில் ஸ்ரீரிக்ஷயா இருந்த அறை கதவு திறக்கப்படவில்லை. இதனால் பெற்றோர் ஜன்னல் வழியாக பார்த்தபோது அவர் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். உடனே பெற்றோரும், அக்கம்பக்கத்தினரும் அறைக்குள் சென்று ஸ்ரீரிக்ஷயா உடலை கீழே இறக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிவந்திபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...