தமிழக செய்திகள்

விஷ பூச்சி கடித்து மாணவி பலி

விஷ பூச்சி கடித்து மாணவி பலியானார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சாமிநத்தம் பகுதியை சேர்ந்தவர் மாரிச்செல்வம். இவருடைய மகள் காவிய லட்சுமி (வயது 12). இவர் சாட்சியாபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் காவியலட்சுமியும், அவரது தாய் முத்துமாரியும் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது விஷ பூச்சி ஒன்று கடித்ததில் காவிய லட்சுமி மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக சிவகாசியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், காவிய லட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.