தமிழக செய்திகள்

மாணவர் தற்கொலை: அரசு கவின் கலைக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

அரசு கவின் கலைக் கல்லூரி மாணவர் நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து அக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை

வேலூர் மாவட்டம் அடுக்கும்பாறை என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் சென்னையில் இயங்கி வரும் அரசு கவின் கலைக் கல்லூரியில் செராமிக் (சுடுமண்) துறையில் இறுதியாண்டு படித்துவந்தார்.

சொந்த ஊரான வேலூர் சென்றிருந்த பிரகாஷ், நேற்றிரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். `எனது சாவுக்கு துறைத்தலைவர் (H.O.D) மட்டுமே காரணம் என்று 4 பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இதைத் தொடர்ந்து கவின் கலைக் கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.