தமிழக செய்திகள்

விஷம் குடித்துவிட்டு பள்ளிக்கு வந்த மாணவி சாவு

விஷம் குடித்துவிட்டு பள்ளிக்கு வந்த மாணவி பரிதாபமாக இறந்தார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உள்ள ஆர்.காவனூர் ஆசாரிமடம் பகுதியை சேர்ந்தவர் பூமிநாதன். இவருடைய மகள் தீபிரித்திகா (வயது 17). இவர் ராமநாதபுரத்தில் தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வந்தார்

இந்தநிலையில் சரியாக படிக்காததால் அவரை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தீபிரித்திகா விஷம் குடித்துவிட்டு நேற்று பள்ளிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

சாவு

பள்ளியில் வைத்து அவர் திடீரென வாந்தி எடுத்துள்ளார். அவரிடம் விசாரித்தபோது, விஷம் குடித்து இருப்பதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைத்த ஆசிரியர்கள், மாணவி தீபிரித்திகாவை ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.