தமிழக செய்திகள்

சிவகங்கை மாணவர்கள் சாதனை

மாநில சிலம்ப போட்டியில் சிவகங்கை மாணவர்கள் சாதனை படைத்தனர்.

தினத்தந்தி

மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் சென்னையில் நடைபெற்றது. இதில் சிவகங்கை பண்ணை மாரிவேணி குளோபல் பள்ளி 8-ம் வகுப்பு மாணவர் சித்திக் பாண்டியன் தனித்திறன் போட்டியில் முதலிடமும், இரட்டை கம்பு போட்டியில் இரண்டாம் இடமும், இரட்டை வாள்வீச்சு போட்டியில் முதலிடமும் பெற்றார். மேலும் 6-ம் வகுப்பு மாணவி சுப ரூபிணி தனித்திறன் போட்டியில் முதலிடம் பெற்றார். இதேபோல் 5-ம் வகுப்பு மாணவர் சஞ்சய், 3-ம் வகுப்பு மாணவர் புவனேஷ் ஆகியோர் பதக்கம் வென்றனர்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி, முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், பண்ணை கல்வி குழுமத்தின் தலைவர் கார்த்திகேயன், துணை தலைவர் பரத் ஸ்ரீனிவாஸ், நிர்வாக இயக்குனர் ஸ்ரீநிவாஸ் நிரஞ்சன், செயல் அலுவலர் மற்றும் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர். 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது