தமிழக செய்திகள்

மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

திரு.வி.க. அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடந்தது

தினத்தந்தி

திருவாரூர்;

திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியிலும் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கியது. மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் கல்லூரி அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டு இருக்கிறது. நேரடி கலந்தாய்வு நடந்த முதல் நாளான நேற்று 28 பேருக்கு இடம் ஒதுக்கப்பட்டது. இதில் விளையாட்டு பிரிவில் 20 பேர், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 12 பேர், என்.சி.சி.பிரிவில் 1 ஒருவருக்கு இடம் ஒதுக்கப்பட்டது.நாளை(திங்கட்கிழமை) வணிகவியல் மற்றும் வணிக மேலாண்மை துறைக்கும், நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) அனைத்து கலை பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது. 2-ம் கட்ட கலந்தாய்வு 8-ந் தேதி(வியாழக்கிழமை) தொடங்குகிறது. அதில் 8-ந் தேதி தமிழ், ஆங்கில துறைக்கும், 9-ந் தேதி(வௌளிக்கிழமை) அறிவியல் பிரிவுகளுக்கும், 12-ந் தேதி(திங்கட்கிழமை) வணிகவியல் மற்றும் வணிக மேலாண்மை பிரிவுகளுக்கும், 13-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) அனைத்து இதர கலைபிரிவுகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து