தமிழக செய்திகள்

மாநில அளவிலான வினாடி-வினா போட்டிக்கு 4 மாணவர்கள் தேர்வு

மாநில அளவிலான வினாடி-வினா போட்டிக்கு 4 மாணவர்கள் தேர்வாகி உள்ளனர்.

தினத்தந்தி

சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் பேசியபோது பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் செயல்பாடுகளை ஊக்குவிக்க மாணவர் மன்றங்களை புதுப்பித்து சிறப்பாக செயல்பட வழிவகை செய்யப்படும் என்று தெரிவித்தார். இதன் அடிப்படையில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டன. இவை ஒன்றிய அளவிலும் பின்னர் மாவட்ட அளவில் நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. தற்போது மாநில அளவிலான போட்டிகள் வருகிற 3-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் கலந்து கொள்ள சிவகங்கை மாவட்டம் வெற்றியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி காவியா, 7-ம் வகுப்பு படிக்கும் மாணவர் குகன் ஆகியோரும், சிவகங்கை 48 காலனியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பிரித்விராஜ் மற்றும் முகமது இர்பான் ஆகிய 4 பேர் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்