சென்னை,
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் புதிய அறுவை சிகிச்சை உபகரணங்கள் மற்றும் பல்வேறு புதிய திட்டங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு திட்ட பயன்பாடுகளை தொடங்கி வைத்தார்.
இதன் பிறகு பேசிய அவர், 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு, கடந்த ஆண்டு வழங்கியதைப் போல் இந்த ஆண்டும் மருத்துவ பாடத்திட்டங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட மடிக்கணிணிகளை முதல்-அமைச்சர் விரைவில் வழங்குவார் என தெரிவித்துள்ளார்.