பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே கோடங்கிபட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு பயிலும் மாணவர்கள் பண்ணை தொழில் குறித்து அறிந்து கொள்ள பள்ளிக்கு அருகில் உள்ள ரங்கசாமி என்பவரின் மாட்டுப்பண்ணைக்கு களப்பயணமாக அழைத்து செல்லப்பட்டனர். அங்கு மாணவர்களுக்கு கால்நடைகளை பராமரித்தல், மாட்டுத்தொழுவத்தை சுத்தம் செய்தல், தீவனம் அளித்தல், கால்நடைகளை நோய்களில் இருந்து பாதுகாக்க தடுப்பூசி அளித்தல், பால் கறத்தல் மற்றும் அதை கூட்டுறவு சங்கங்களுக்கு விற்பனைக்கு கொடுத்தல், சாணம் மற்றும் கோமியம் மூலம் தயாரிக்கப்படும் உரம், இயற்கை உரங்கள் தயாரித்தல் குறித்து தெளிவாக ஆசிரியை சத்தியா விளக்கம் அளித்தார். இதை பள்ளி மாணவவர்கள் உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் கேட்டறிந்தனர். இந்த களப்பயணத்தை பள்ளி தலைமை ஆசிரியர் தினகரன் ஏற்பாடு செய்து இருந்தார்.