தமிழக செய்திகள்

மாணவர்கள் போராட்டம் ; சென்னை பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவிப்பு

மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து சென்னை பல்கலைக்கழகத்திற்கு நாளை முதல் 23ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதலை பெற்றுள்ள இந்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் பெரிய அளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

டெல்லியில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினார்கள். அப்போது வன்முறையும் வெடித்தது. மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதை கண்டித்து போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இன்று காலை சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து சென்னை பல்கலைக்கழகத்துக்கு டிச.23 வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. டிச.23 வரை வகுப்புகள், தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகிறது என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டிச. 24 முதல் ஜன.1 வரை பல்கலைக்கழகத்திற்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக சென்னை பல்கலைக்கழகத்திற்கு ஜனவரி 1 வரை விடுமுறை நீடிக்கிறது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...