தமிழக செய்திகள்

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சேர்ந்த மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.ஐ.ஐ.டி, என்.ஐ.டி பட்டப்படிப்பு மற்றும் மத்திய பல்கலை கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சேர்ந்த மாணவ, மாணவியர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ, மாணவியருக்கு ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

இந்த கல்வி உதவித்தொகைக்கு 2023- 2024 கல்வி ஆண்டில் புதியது மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட நல இயக்ககம், மிக பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம் அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை அணுகியோ அல்லது http://bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்தோ விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித் தொகை விண்ணப்பத்தினை மாணவர்கள் பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து கீழ்கண்ட முகவரிக்கு பூர்த்தி செய்த புதுப்பித்தல் விண்ணப்பங்களை வருகிற டிசம்பர் 15 -ந் தேதிக்குள்ளும் மற்றும் புதிய விண்ணப்பங்களை அடுத்த ஆண்டு 2024 ஜனவரி மாதம் 15- ந் தேதிக்குள்ளும் ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டிடம், 2-வது தளம், சேப்பாக்கம் சென்னை - 5 என்ற முகவரியிலோ அல்லது 044 - 29515942 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது மின்னஞ்சல் முகவரி tngovtiitscholarship@gmail.com அனுப்பி வைக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை