ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரிக்கு சாலை அமைக்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில், தற்போது சாலை முற்றிலும் சேதம் அடைந்து கற்குவியலாக காணப்படுகிறது. இதனால் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் வாகனங்களிலும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆண்டிப்பட்டி அரசு கல்லூரிக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.