தமிழக செய்திகள்

ஆய்வு

பாபநாசம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.

தினத்தந்தி

பாபநாசம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை தமிழ்நாடு மத்திய தணிக்கை துறை தலைமை கணக்காயர் நெடுஞ்செழியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 3 ஆண்டுகளில் இதுவரை நடைபெற்று முடிந்த வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் நடந்து வரும் பணிகள் குறித்து பார்வையிட்டார். தொடர்ந்து ராஜகிரி ஊராட்சியில் நுண்ணுயிர் உரம் தயாரித்தல் மையம், கிராம சேவை மைய கட்டிடம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிட பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது சுய உதவி குழு செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார், பின்னர் மரக்கன்று நட்டு வைத்தார். ஆய்வின் போது

முதுநிலை தணிக்கையாளர் முரளி, மேற்பார்வையாளர் மனோகர், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவகுமார், ராஜகிரி ஊராட்சி மன்ற சமீமா பர்வீன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு