தமிழக செய்திகள்

சுபஸ்ரீ பலியான விவகாரம்: மேலும் 4 பேர் கைது

பேனரால் சுபஸ்ரீ உயிரிழந்த விவாகாரத்தில் ஜெயகோபலை தொடர்ந்து மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியான சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பொது இடத்தில் அனுமதியின்றி பேனர் வைத்து இடையூறு செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனிடையே கடந்த 20-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பியும், ஆஜராகாமல் ஜெயகோபால் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். தலைமறைவாக உள்ள ஜெயகோபாலை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. ஒரு தனிப்படை கிருஷ்ணகிரி, ஒகேனக்கல் பகுதியில் தேடி வந்தது. இதனையடுத்து தலைமறைவான ஜெயகோபாலை கிருஷ்ணகிரியில் போலீசார் நேற்று கைது செய்தனர். சென்னையில் ரகசிய இடத்தில் வைத்து ஜெயகோபாலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

இந்நிலையில் தற்போது ஜெயகோபலை தொடர்ந்து மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேனர் வைத்த கொடி கட்டிய பழநி, சுப்பிரமணி, சங்கர், லட்சுமிகாந்த் ஆகியோரை தனிபடை போலீசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட ஜெயகோபாலிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு