தமிழக செய்திகள்

தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

தண்ணீரில் நெற்பயிர்கள் மூழ்கின.

தினத்தந்தி

லால்குடி:

லால்குடியை அடுத்த மைக்கேல்பட்டி கிராமத்தின் வழியாக நகர், கீழப்பெருங்காலூர் பகுதிகளுக்கு நகர பாசன வாய்க்கால் செல்கிறது. இதில் மைக்கேல்பட்டி அருகே இந்த வாய்க்காலில் பாலம் கட்டுவதற்காக பணி நடைபெறுகிறது. இதற்காக வாய்க்காலை அடைத்து வைத்துள்ளனர். இதனால் வாய்க்காலில் வரும் தண்ணீர் அப்பகுதியில் உள்ள சுமார் 15 ஏக்கருக்கும் மேலான நெற்பயிர்களை மூழ்கடித்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்