தமிழக செய்திகள்

மானியத்தில் விவசாயிகளுக்கு தண்ணீர் குழாய்கள்

திருமருகலில் தோட்டக்கலைத்துறை மூலம் மானியத்தில் விவசாயிகளுக்கு தண்ணீர் குழாய்கள் வழங்கப்பட்டது.

தினத்தந்தி

திட்டச்சேரி:

திருமருகல் தோட்டக்கலை துறை மூலம் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், பெரும் விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் ஏக்கர் ஒன்றுக்கு 18 கருப்பு நிற தண்ணீர் குழாய்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான 400 விவசாயிகளுக்கு முழு மானியத்தில் தண்ணீர் குழாய்களை உதவி தோட்டக்கலை அலுவலர்கள் செல்லபாண்டியன், சரவண அய்யப்பன் ஆகியோர் வழங்கினர். மேலும் ஒன்றியத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கு தகுதிக்கு ஏற்ப வாழை, கோவைக்காய் செடி, முள் இல்லா மூங்கில், மூலிகை செடிகள், பூச்செடிகள் உள்ளிட்டவைகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டது. அப்போது இந்த தண்ணீர் குழாய்கள் மூலம் குறைவான அளவில் தண்ணீர் பயன்பாடு, மகசூல் அதிகரிப்பு, களைகள் வளர்வது குறைக்கப்படும். மின்சாரம் குறைவான அளவில் பயன்படும் என உதவி தோட்டக்கலை அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும் தண்ணீர் குழாய்கள் தேவைப்படும் சிறு, குறு விவசாயிகள் 100 சதவீத மானியத்தில் பெற தோட்டக்கலை அலுவலகத்திற்கு வந்து சிறு, குறு விவசாய சான்று, அடங்கல், நிலத்தின் வரைபடம், ஆதார் நகல், தொலைபேசி எண் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பங்களை அளிக்க வேண்டும் என்றனர். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்