தமிழக செய்திகள்

திடீரன பய்த கோடை மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு

வேதாரண்யத்தில் திடீரன பெய்த கோடை மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. தேங்கிய மழை நீரை மோட்டார் மூலம் தொழிலாளர்கள் வெளியேற்றி வருகின்றனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யத்தில் திடீரன பெய்த கோடை மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. தேங்கிய மழை நீரை மோட்டார் மூலம் தொழிலாளர்கள் வெளியேற்றி வருகின்றனர்.

கோடை மழை

வேதாரண்யம் பகுதியில் கடந்த 20 நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்லாமல் வீடுகளில் முடங்கி கிடந்தனர். நேற்று அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்தது. சுமார் 3 மணி நேரம் பெய்த இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த கோடை மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

உப்பு உற்பத்தி பாதிப்பு

வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் உப்பு உற்பத்தி முழு வீச்சில் நடைபெற்று வந்தது. திடீரென்று நேற்று பெய்த கோடை மழையால் உப்பு பாத்திகளில் மழைநீர் தேங்கி, உப்பு உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சேமித்து வைத்துள்ள உப்பை தார்பாய் கொண்டு உற்பத்தியாளர்கள் மூடி பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

இதையடுத்து உப்பு பாத்திகளில் தேங்கிய மழை நீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்க இன்னும் ஒரு வார காலம் ஆகும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். 

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்