கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

உயிரியல் பூங்காக்களின் நுழைவு கட்டணம் திடீர் உயர்வு

உயிரியல் பூங்காக்களின் நுழைவு கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை கிண்டி, வண்டலூர், குருவம்பட்டி, வேலூர் உள்ளிட்ட உயிரியல் பூங்காக்களின் நுழைவு கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச நுழைவு கட்டணம் தொடர்கிறது. தற்போது உள்ள சக்கர நாற்காலிக்கான ரூ.25 கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் சைக்கிள் மற்றும் ரிக்ஷாவுக்கு நிறுத்துமிட கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. டைம்-ஸ்லாட் நிறுத்துமிட கட்டண முறையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பைக் முதல் பேருந்து வரையிலான வாகனங்களின் நிறுத்த கட்டணம் மணிக்கணக்கில் இருந்து நாள் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது.

பூங்காக்களுக்கு வருகை தரும் பெரியவர்களுக்கான நுழைவு கட்டணம் ரூ.115-லிருந்து 200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கான கட்டணம் ரூ.100-லிருந்து 150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சஃபாரி வாகனங்களுக்கான கட்டணம் ரூ.50-லிருந்து 150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை