தமிழக செய்திகள்

நடுவானில் திடீர் எந்திரக்கோளாறு: அந்தமான் சென்ற விமானம் அவசரமாக சென்னை திரும்பியது

சென்னையில் இருந்து அந்தமான் சென்ற விமானம் நடுவானில் பறந்தபோது திடீரென எந்திரக்கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் சென்னையில் அவசரமாக தரை இறக்கப்பட்டது. இதனால் 123 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

தினத்தந்தி

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு விமானம் புறப்பட்டு சென்றது. அதில் 117 பயணிகளும், 6 விமான ஊழியாகளும் என 123 பேர் பயணம் செய்தனர்.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென எந்திரக்கோளாறு ஏற்பட்டு உள்ளதை விமானி கண்டுபிடித்தா. அதே நிலையில் விமானத்தை தொடாந்து இயக்கினால் பெரும் ஆபத்து என்பதை உணர்ந்த விமானி, உடனடியாக இதுபற்றி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தா.

அவசரமாக தரை இறங்கியது

இதையடுத்து விமானத்தை தொடாந்து இயக்கவேண்டாம். மீண்டும் சென்னைக்கே திரும்பி வரும்படி விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனா. அத்துடன் சென்னை விமான நிலையத்தில், அந்தமான் விமானம் அவசரமாக தரை இறங்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

அந்தமான் சென்ற விமானம், சுமார் 45 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தது. சென்னை விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரை இறங்கியது.

123 பேர் உயிர் தப்பினர்

இதனால் விமானத்தில் இருந்த 123 பேரும் அதிர்ஷ்டவசமாக உயி தப்பினாகள். பின்னர் பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு விமான நிலைய பயணிகள் ஓய்வுகூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். விமான என்ஜினீயர்கள் குழுவினர், விமானத்தில் ஏறி எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறை பழுது பாக்கும் பணியில் ஈடுபட்டனா.

பயணிகளை மாற்று விமானம் மூலம் அந்தமானுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்