தமிழக செய்திகள்

ராசிபுரத்தில் திடீர் மழை

ராசிபுரத்தில் திடீர் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தினத்தந்தி

ராசிபுரம்

ராசிபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் வெயில் அதிக அளவில் காணப்பட்டது. வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்த போதிலும் அவ்வப்போது மழையும் பெய்து வந்தது. கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகம் இருந்து வந்தது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் ராசிபுரம் மற்றும் சுற்று வட்டாரங்களில் திடீரென சுமார் மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதனால் தெருக்களிலும், சாலையோரங்களிலும், வயல்களிலும், தண்ணீர் தேங்கி நின்றது. இரவு நேரத்தில் குளிர்ந்த காற்று வீசியது. பகலில் வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்ட பொதுமக்கள் இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதால் மகிழ்ச்சி அடைந்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்