தமிழக செய்திகள்

தஞ்சையில் திடீர் மழை

தஞ்சையில் நேற்று பெய்த திடீர் மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தஞ்சையில் நேற்று பெய்த திடீர் மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வெயில்

தமிழகத்தில் கோடை காலம் முடிந்தும் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்தபடியே காணப்படுகிறது. குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.

அதன்படி நேற்று காலை முதல் வெயில் கொளுத்தியது. மாலை 5 மணிக்கு பிறகு வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது. இந்த நிலையில் திடீரென மழை பெய்யத்தொடங்கியது. லேசான தூறலுடன் மழை பெய்த வண்ணம் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் மழையில் நனைந்தபடி வீடு திரும்பினர்.

வெப்பம் தணிந்தது

மேலும், திடீரென பெய்த மழையினால் வாகன ஓட்டிகளும் மழையில் நனைந்த வண்ணம் வாகனங்களில் சென்றதை காணமுடிந்தது. ஒருசில வாகன ஓட்டிகள் சாலையோர கடைகளில் தஞ்சம் அடைந்து மழை நின்றதும் சென்றனர்.

மாலை பெய்ய தொடங்கிய மழை அவ்வப்போது விட்டு, விட்டு பெய்த வண்ணம் இருந்தது.

தொடர்ந்து வெயில் கொளுத்தி வந்த நிலையில் தற்போது மழை பெய்ததன் மூலம் இரவில் வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதே போல தஞ்சையை சுற்றியுள்ள திருக்காட்டுப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் பரவலாக மழை பெய்தது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு