தமிழக செய்திகள்

பா ஜ க கொடிக்கம்பம் திடீர் அகற்றம்

சின்னசேலம் அருகே பா ஜ க கொடிக்கம்பம் திடீர் அகற்றம்

தினத்தந்தி

சின்னசேலம்

சின்னசேலம் அருகே உள்ள கல்லாநத்தம் மாரியம்மன்கோவில் எதிரே உள்ள பொது இடத்தில் பா.ஜ.க.வினர் கொடிக்கம்பம் அமைத்து இருந்தனர். ஆனால் அனுமதி இல்லாமல் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளதாக கல்லாநத்தம் கிராம நிர்வாக அலுவலர் கண்ணதாசன் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகளும், சின்னசேலம் போலீசாரும் கல்லாநத்தம் கிராமத்துக்கு சென்று பா.ஜ.க. கொடிக்கம்பத்தை அப்புறப்படுத்தினர். மேலும் இது தொடர்பாக கல்லாநத்தம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணியன் மகன் கோவிந்தன்(வயது 47) என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்