தமிழக செய்திகள்

கொடைக்கானல் அருகே வனப்பகுதி நிலத்தில் திடீர் பிளவு - அதிகாரிகள் ஆய்வு

நிலத்தில் ஏற்பட்ட வெடிப்பு தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

திண்டுக்கல்,

கொடைக்கானல் அருகே மேல்மலையில் உள்ள கீழ் கிளாவரை கிராமத்திற்கு கடந்த சில நாட்களாக செருப்பன் ஓடையில் இருந்து தண்ணீர் வராமல் இருந்துள்ளது. இதையடுத்து கிராம மக்கள் சிலர் நேற்று வனப்பகுதிக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது  கூனிப்பட்டி என்ற வனப்பகுதியில் சுமார் 300 அடி நீளத்திற்கு நிலம் பிளவுபட்டு இருந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர், வனப்பகுதியில் நிலம் பிளவுபட்டு இருப்பது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வனப்பகுதியில் நிலத்தில் ஏற்பட்ட வெடிப்பு தொடர்பாக அதிகாரிகள் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர். ஆனைமலை புலிகள் காப்பக வந்தரேவு வனச்சரகர், புவியியல் தொழில்நுட்ப உதவி இயக்குநர், தீயணைப்புத் துறை, வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர், திடீர் பிளவுக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்