தமிழக செய்திகள்

சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு

சென்னை அண்ணா சாலையை தொடர்ந்து கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையிலும் திடீர் பள்ளம் ஏற்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சென்னையில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வருவதால் ஆங்காங்கே சாலைகளில் திடீர் பள்ளம், விரிசல் ஏற்படும் சம்பவம் வாடிக்கையாகி உள்ளது. இந்த நிலையில், சென்னை கீழ்பாக்கம் டெய்லர்ஸ் சாலை சந்திப்பில் திடீரென 6 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டது. மெட்ரோ ரயில் பணி நடந்துவரும் இடத்தில் இந்த பள்ளம் ஏற்பட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பணியாளர்கள் பள்ளத்தை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த திடீர் பள்ளத்தால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்பட்டதாக இதுவரை தெரிவிக்கப்படவில்லை. மெட்ரோ ரயில் ஊழியர்கள் கான்கிரீட் கலவைகளை கொண்டு பள்ளத்தை சீரமைத்தனர். இதையடுத்து, சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் சீரமைக்கப்பட்டது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை