தமிழக செய்திகள்

திருப்பாச்சேத்தியில் காட்டுப்பன்றிகளால் கரும்பு விவசாயம் பாதிப்பு

திருப்பாச்சேத்தியில் காட்டுப்பன்றிகளால் கரும்பு விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

திருப்புவனம்

திருப்பாச்சேத்தி பகுதியில் கரும்பு, நெல், வாழை உள்ளிட்ட பயிர் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இதில் கரும்பு விவசாயம் சுமார் 250 ஏக்கருக்கு மேல் பயிர் செய்துள்ளனர். இந்த அறுவடை செய்யப்படும் கரும்புகள் தனியார் மில்லுக்கு அரவைக்கு கொண்டு செல்கின்றனர். விவசாயிகள் பயிரிட்ட கரும்புகளை இரவு முதல் அதிகாலை நேரத்திற்குள் காட்டுப்பன்றிகள் புகுந்து நாசமாக்குகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயி நாகசுந்தரம் கூறும்போது:-

நான் இப்பகுதியில் சுமார் 5 ஏக்கர் வரை கரும்பு பயிரிட்டு உள்ளேன். இதில் நேற்று முன்தினம் ஒருநாள் மட்டுமே 1 ஏக்கர் கரும்பு பயிர்களை காட்டுப்பன்றிகள் இரவு நேரத்தில் புகுந்து நாசப்படுத்தி விட்டு சென்றுள்ளன. ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவு செய்து உள்ளோம்.. இன்னும் சில மாதங்களில் பயிர் பலனுக்கு வந்து விடும். இந்த நேரத்தில் காட்டுப்பன்றிகள் கரும்பை நாசப்படுத்தியதால் வேதனை அடைந்து உள்ளேன் என்றார். மேலும் காட்டு பன்றிகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு