ஊத்தங்கரை
ஊத்தங்கரை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ரகு (வயது28). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை. இதனால் மனவேதனையில் இருந்த ரகு சம்பவத்தன்று விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ரகு பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.