தமிழக செய்திகள்

கம்பைநல்லூர் அருகேவிஷம் குடித்து பெண் தற்கொலை

தினத்தந்தி

மொரப்பூர்:

கம்பைநல்லூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

பெண்

தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள கெலவள்ளி பெரிச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன். இவருடைய மனைவி கண்ணகி (வயது 45). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்திருந்தார். மேலும் அவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த கண்ணகி நேற்று வீட்டில் விஷத்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு கம்பைநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

விசாரணை

பின்னர் அவர் மேல்சிகிச்கைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் கண்ணகி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கண்ணகியின் கணவர் கம்பைநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யோக பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்