தமிழக செய்திகள்

தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தினத்தந்தி

உலகம் முழுவதும் செப்டம்பர் 10-ந்தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் மனநலப்பிரிவு சார்பில் நடந்த விழிப்புணர்வு பேரணியை கல்லூரி முதல்வர் ரேவதிபாலன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பாலசுப்பிரமணியன், உதவி முதல்வர் டாக்டர் சுரேஷ்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரணியில் அரசு செவிலியர் பள்ளி மாணவிகள், மனநலப்பிரிவு முதுநிலை, இளநிலை மருத்துவ பயிற்சி மாணவர்கள் கலந்து கொண்டனர். பேரணியில் தற்கொலை தடுப்பு குறித்த பதாகைகளை கைகளில் ஏந்தியபடி ஆஸ்பத்திரி வளாகத்தில் ஊர்வலம் சென்றனர். முன்னதாக மனநலப்பிரிவு துறைத்தலைவர் டாக்டா ரமேஷ் பூபதி வரவேற்றார். பின்னர் தற்கொலை தடுப்பு உறுதிமொழி ஏற்கபட்டது.

நிகழ்ச்சியில் மனநல பிரிவு டாக்டர்கள் புவனேஷ்வரன், காட்சன், சீனிவாசன், கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இணை பேராசிரியர் டாக்டர் ராமானுஜம் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை செவிலியர் பயிற்றுனர் செல்வன் தொகுத்து வழங்கினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்