தூத்துக்குடி,
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராடிய போது போலீஸ் துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்த பின்னர் ஆலை மூடப்பட்டது.
இந்நிலையில் ஆலையில் இருந்து ரசாயன கசிவு வெளியேறுவதாக தகவல் வெளியாகியது. இதனையடுத்து அங்கு அதிகாரிகள் குழு ஆய்வு செய்கிறது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறினார். அதன்படி மாலை ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் சேமிப்பு கிடங்கில் லேசான கசிவு உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்டுள்ள லேசான கசிவை கண்டு மக்கள் அச்சப்பட தேவையில்லை. ஆலையில் ஏற்பட்டுள்ள கசிவு நாளை சரிசெய்யப்படும் என கூறியுள்ளார்.