தமிழக செய்திகள்

கோடை விடுமுறை: தாம்பரம் - மங்களூரு இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

தாம்பரம் - மங்களூரு இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

கோடைவிடுமுறையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தாம்பரம் - மங்களூரு இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தாம்பரத்தில் இருந்து வருகிற 6, 9, 14, 16, 21, 23, 28, 30 ஆகிய தேதிகளில் (வெள்ளி மற்றும் ஞாயிற்றுகிழமை) மதியம் 1.55 மணிக்கு புறப்பட்டு செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்-06047) மறுநாள் காலை 6.55 கர்நாடக மாநிலம் மங்களூரு சென்றடையும்.

மறுமார்க்கமாக, மங்களூருவில் இருந்து வருகிற 8, 10, 15, 17, 22, 24, 29 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் (சனி மற்றும் திங்கட்கிழமை) மதியம் 12 மணிக்கு புறப்பட்டு வரும் சிறப்பு ரெயில் (06048) மறுநாள் அதிகாலை 4.45 மணிக்கு தாம்பரம் வந்து சேரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து