தமிழக செய்திகள்

கோடைகால சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

கோடை விடுமுறையில் இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் குறித்து தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை,

கோடை விடுமுறையை முன்னிட்டு கீழ்க்கண்ட சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

* தாம்பரம்-நாகர்கோவில்(வண்டி எண்: 06005) இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற ஏப்ரல் மாதம் 8, 15, 22, 29-ந்தேதி, மே மாதம் 6, 13, 20, 27-ந்தேதி, ஜூன் மாதம் 3, 10, 17, 24-ந்தேதி மற்றும் ஜூலை மாதம் 1-ந்தேதிகளில் மாலை 4.45 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

* நாகர்கோவில்-எழும்பூர்(06006) இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற ஏப்ரல் மாதம் 9, 16, 23, 30-ந்தேதி, மே மாதம் 7, 14, 21, 28-ந்தேதி, ஜூன் மாதம் 4, 11, 18, 25-ந்தேதி மற்றும் ஜூலை 2-ந்தேதிகளில் இரவு 9.40 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

* வேளாங்கண்ணி-எர்ணாகுளம்(06016) இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற ஏப்ரல் மாதம் 5, 12, 19, 26-ந்தேதி, மே மாதம் 3, 10, 17, 24, 31-ந்தேதி, ஜூன் மாதம் 7, 14, 21, 28-ந்தேதிகளில் மாலை 6.15 மணிக்கு வேளாங்கண்ணி ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

* எர்ணாகுளம்- வேளாங்கண்ணி(06015) இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற ஏப்ரல் மாதம் 4, 11, 18, 25-ந்தேதி, மே மாதம் 2, 9, 16, 23, 30-ந்தேதி, ஜூன் மாதம் 6, 13, 20, 27-ந்தேதிகளில் காலை 11 மணிக்கு எர்ணாகுளம் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

* எர்ணாகுளம்-ராமேசுவரம்(06045) இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற ஏப்ரல் மாதம் 2, 9, 16, 23, 30-ந்தேதி, மே மாதம் 7, 14, 21, 28-ந்தேதி மற்றும் ஜூன் மாதம் 4, 11, 18, 25-ந்தேதிகளில் இரவு 7 மணிக்கு எர்ணாகுளம் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

* ராமேசுவரம்-எர்ணாகுளம்(06046) இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற ஏப்ரல் மாதம் 3, 10, 17, 24-ந்தேதி, மே மாதம் 1, 8, 15, 22, 29-ந்தேதி மற்றும் ஜூன் மாதம் 5, 12, 19, 26-ந்தேதிகளில் மாலை 4 மணிக்கு ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...