தமிழக செய்திகள்

சுந்தர பரிபூரண பெருமாள் கோவில் தேரோட்டம்

வள்ளியூர் சுந்தர பரிபூரண பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது.

தினத்தந்தி

வள்ளியூர்:

வள்ளியூர் சுந்தர பரிபூரண பெருமாள் கோவிலில் ஆவணி மாத தேரோட்ட திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் பல்வேறு பூஜைகள் நடந்து வந்தது. மேலும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 10-ம் நாளான நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. தேரில் சுவாமி எழுந்தருள, ஏராளமான பக்தர்கள் 'கோவிந்தா... கோபாலா...' என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரதவீதிகள் வழியாக தேர் வலம் வந்தது. விழாவில் வள்ளியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது