லக்னோ,
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிவடைந்த பின்னர், 2026 ஐபிஎல் கிரிக்கெட் லீக் தொடங்க இருக்கிறது. இதற்காக 10 அணிகளும் தயாராகி வருகின்றன. டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் தொடர் முடிவடைந்த பின்னர், ஐபிஎல் அணியின் முகாம்களில் பங்கேற்பார்கள். உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பிடிக்காத வீரர்கள் ஏற்கனவே பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
ஐபிஎல் தொடர் நெருங்குவதால், அது தொடர்பான தகவல்கள் அடுத்தடுத்து வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, வீரர்களுக்கான ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளது. இதற்காக பிரத்யேக வீடியோவையும் வெளியிட்டுள்ளது.