தமிழக செய்திகள்

டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 9 பேர் அ.தி.மு.க பொறுப்புகளில் இருந்து நீக்கம்

டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 9 எம்.எல்.ஏக்கள் தாங்கள் வகித்து வந்த அ.தி.மு.க பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.#AIADMK #Dhinakaran

சென்னை

அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் ஆதரவாளர்களை நீக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தர்மபுரி, புதுக்கோட்டை, திருப்பூர் மாவட்ட தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 150 க்கும் மேற்ட்டவர்கள் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர். நீக்கப்பட்டவர்களுடன் அதிமுகவினர் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்று ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிவித்துள்ளனர்.

இதுவரை 200க்கும் மேற்பட்ட தினகரன் ஆதரவாளர்கள் கடசியில் இருந்து நீக்கபட்டு உள்ளனர்.

தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 9 பேர், கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கூட்டாக இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.

டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் கோதண்டபாணி, ஜெயந்தி பத்மநாபன், கலைச்செல்வன், கதிர்காமு, எஸ்.ஜி.சுப்பிரமணியன், மாரியப்பன், கென்னடி, எஸ்.முத்தையா, ஆர்.சுந்தரராஜ் ஆகிய 9 பேர் அதிமுக பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

#EdappadiPalaniswami | #OPanneerselvam | #Latesttamilnews | #AIADMK | #Dhinakaran

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு