தமிழக செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் வெளியீடு

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் வெளியிடப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

உலக நாடுகள் முழுவதும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள் ஆங்கிலத்தில் வெளியிடப்படும் அல்லது அந்த நாட்டின் மொழியில் வெளியிடப்படும். இந்தியா பல மொழிகளை கொண்டுள்ள நாடாக இருந்து வரும் நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள் ஆங்கிலத்தில் அதன் இணையத்தில் பதிவேற்றப்படுகின்றன. தற்போது வழக்கு முடிந்து ஆங்கிலத்தில் தீர்ப்பு பதிவேற்றப்படும் அதே நேரத்தில் ஆங்கிலம் தவிர, இந்தி, தெலுங்கு, கன்னடம், அசாம், ஒடியா ஆகிய ஐந்து மொழிகளிலும் தீர்ப்பை பதிவேற்றம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. விரைவில் மற்ற மொழிகளிலும் தீர்ப்புகள் வெளியாக ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு கூடுதல் கட்டிட திறப்பு விழா இன்று நடந்தது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த விழாவில் கலந்து கொண்டார். அவரிடம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் நகல்களை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே வழங்கினார். இதில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள் தெலுங்கு, இந்தி, ஒடியா, மராட்டி, அசாமி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டு உள்ளது. நீதிபதி பாப்டே வழங்கிய நகல்கள் பட்டியலில் தமிழ்மொழி இடம்பெறவில்லை.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை