சென்னை,
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பொறுப்பு கூடுதலாக சுப்ரியா சாகுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன்படி தற்போது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளராக உள்ள சுப்ரியா சாகுவிற்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழக மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக இருந்த வெங்கடாச்சலம் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் கூறப்பட்டது. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார், வழக்குப்பதிவு செய்த நிலையில், தலைமை செயலாளர் இறையன்பு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.