தமிழக செய்திகள்

ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு

ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு செய்யப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில் நிலங்களை கண்டறிந்து, நவீன முறையில் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் நிலங்களை அளவீடு செய்ய அறநிலையத்துறை சார்பில் 3 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதுவரை ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான 819 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆண்டாள் கோவில் நிர்வாக அதிகாரி முத்துராஜா கூறுகையில், இந்து சயம அறநிலையத்துறை சார்பில் கோவில் நிலங்களை கண்டறிதல், அளவீடு செய்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் ஆகிய 3 பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கோவில் நிலங்களை முழுமையாக மீட்பதில் அரசு உறுதியாக செயல்பட்டு வருகிறது. ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமாக 1,500 ஏக்கர் நிலங்கள் உள்ளன. அவற்றை அளவீடு செய்து இந்து சமய அறநிலையத்துறை கல் ஊண்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்பணிகள் நிறைவடையும். இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...