தமிழக செய்திகள்

அறநிலையத்துறை உதவி ஆணையர், செயல் அலுவலர் பணி இடை நீக்கம்

லஞ்ச வழக்கில் கைதான அறநிலையத்துறை உதவி ஆணையர், செயல் அலுவலர் பணி இடை நீக்கம் செய்து இந்து அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டு உள்ளார்.

தினத்தந்தி

நாமக்கல் அருகே உள்ள முத்துகாப்பட்டி பெரியசாமி கோவில் பூசாரி அண்ணாதுரையிடம், கடந்த 27-ந் தேதி ரூ.21 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது கோவில் செயல் அலுவலர் லட்சுமி காந்தனை நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேசுக்கு வழங்க செயல் அலுவலர் லட்சுமி காந்தன் லஞ்சம் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் உதவி ஆணையர் ரமேஷ், செயல் அலுவலர் லட்சுமிகாந்தனை பணி இடை நீக்கம் செய்து இந்து அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டு உள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து