தமிழக செய்திகள்

டி20 உலக கோப்பை மகளிர் கிரிக்கெட்: சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டு

19 வயதுக்கு உட்பட்டோருக்கான டி20 உலக கோப்பை மகளிர் கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டு தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற 19 வயதுக்கு உட்பட்ட இந்திய மகளிர் அணிக்கு மக்கள் நீதி மய்யம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் பதிவில், "தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது பாராட்டுக்குரியது. முதல்முறையாக நடத்தப்பட்ட போட்டியிலேயே, இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்த இளம் வீராங்கனைகளை மக்கள் நீதி மய்யம் வாழ்த்துகிறது. இதேபோல, அனைத்து விளையாட்டுகளிலும் இந்திய வீரர், வீராங்கனைகள் வெற்றி வாகை சூடி, உலகமெங்கும் இந்தியக் கொடியை பட்டொளி வீசிப் பறக்கச் செய்ய வேண்டுமென விழைகிறோம்" என்று தெரிவித்துள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு