தமிழக செய்திகள்

அரசின் திட்டங்கள், அறிவிப்புகளை முழு ஈடுபாட்டுடன் மக்களிடம் கொண்டு செல்லுங்கள்: செய்தித்துறை அமைச்சர்

அரசின் திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை செய்தி தொடர்பு அலுவலர்கள் முழு ஈடுபாட்டுடன் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று செய்தித்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

தினத்தந்தி

ஆய்வுக்கூட்டம்

சென்னை, கலைவாணர் அரங்கத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் வீ.ப.ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், தமிழரசு சந்தா, எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்திற்கான முன்மொழிவுகள் மற்றும் அறிவிப்புகள், பத்திரிகையாளர்களுக்கான நலத்திட்டங்கள், நினைவிடங்களைச் சிறப்பாக பராமரித்தல், நிர்வாகத்தில் மின்ஆளுமை பயன்பாட்டை அதிகரித்தல், மின்னணு விளம்பர (எல்.இ.டி) வாகனத்தின் பயன்பாடு மற்றும் கொரோனா விழிப்புணர்வு குறித்து மாவட்டங்களில் மேற்கொண்ட பணிகள் போன்றவை குறித்து ஆய்வு செய்தார்.

ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

பத்திரிகையாளர்கள்

அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள நலத்திட்டங்களைச் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் பொதுமக்களுக்குச் சிறப்பான முறையில் கொண்டு சேர்த்து அவர்கள் பயன்பெறும் வகையில் தங்களது பணியைத் திறமையாகச் செய்ய வேண்டும். மேலும், அரசின் திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் குறித்து பொதுமக்கள் அறியும் வகையில் விளம்பர பணிகளை மேற்கொள்ள வேண்டும்.செய்தி மக்கள் தொடர்புத்துறையால் வெளியிடப்படும் தமிழரசு இதழின் சந்தாக்களை அதிக அளவில் சேர்ப்பதற்கு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும். பத்திரிகையாளர்களின் நலத்திட்ட உதவிகள் குறித்த விண்ணப்பங்களைத் தாமதப்படுத்தாமல் பத்திரிகையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் விரைந்து கிடைத்திட, மாவட்ட கலெக்டரின் பரிந்துரையை விரைந்து அனுப்பி வைக்கவும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காலி பணியிடங்கள்

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவகங்கள், மணிமண்டபங்கள், நினைவுத் தூண்கள் போன்றவை இருக்கும் இடத்தினை எளிதில் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் அவ்விடங்களுக்கு முன்பு 5 கிலோமீட்டர் மற்றும் 1 கிலோமீட்டர் தூரங்களில் அவ்விடங்கள் இருப்பது குறித்த அறிவிப்பு பலகைகளை நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சாலைகளில் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.இன்றைய இளைய தலைமுறையினரும் அறிந்து பயன்பெறும் வகையில், தலைவர்களின் அரிய புகைப்படங்களை ஆவணக்காப்பகங்கள் மற்றும் அறிஞர்களிடம் பெற்று, மணிமண்டபங்களில் வைத்துக் காட்சிப்படுத்தலாம். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் தங்கள் மாவட்டங்களில் நினைவு மண்டபங்கள் மற்றும் மணிமண்டபங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்புப் பணிகள் மற்றும் அலுவலகத்தில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்புவது குறித்த கருத்துருக்களை விரைந்து தலைமையிடத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும்.

மக்களுக்கு கொண்டு செல்லுங்கள்

கட்டி முடிவடையும் நிலையில் உள்ள நினைவு மண்டபங்கள், மணிமண்டபங்கள் போன்றவற்றை விரைந்து கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்-அமைச்சர் தலைமையிலான அரசின் தேர்தல் வாக்குறுதிகளுக்கு முக்கியத்துவம் தந்து அதனை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை நமது துறையில் உள்ள எல்.இ.டி வாகனம் போன்ற நவீன உபகரணங்கள் மற்றும் நமது அனுபவத்தையும் பயன்படுத்தி, முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு மக்களுக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.

இக்கூட்டத்தில் நிறைவாக, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கூடுதல் இயக்குனர் (செய்தி) தி.அம்பலவாணன் நன்றி கூறினார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்