தமிழக செய்திகள்

கோவை மாவட்ட நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடல்

கோவை மாவட்ட நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.

தினத்தந்தி

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தி கொரோனா தடுப்பு நிவாரண பணிகள் மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து கேட்டறிந்து வருகிறார்.

அந்த வகையில், கோவை மாநகர் கிழக்கு - மாநகர் மேற்கு மற்றும் கோவை கிழக்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் கழக அணிகளின் மாநில நிர்வாகிகளுடன் நேற்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.

அப்போது, அவர்கள் பகுதிகளில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்புகள் குறித்தும் கட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்தும் விசாரித்து அறிந்து ஆலோசனைகள் வழங்கினார்.

மேற்கண்ட தகவல் தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை