தமிழக செய்திகள்

ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தல் - 6 பேர் கைது

ராமேஸ்வரம் மரைக்காயர் பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்திச் செல்லப்பட்ட 2 டன் மஞ்சளுடன் படகு பறிமுதல் செய்யப்பட்டது.

தினத்தந்தி

ராமேஸ்வரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் மஞ்சள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, மத்திய புலனாய்வுத் துறையினர் மரைக்காயர் பட்டினத்தில் முகாட்டு ஆய்வு மேற்கொண்டு வந்தனர். அப்போது மரைக்காயர் பட்டினத்தில் இருந்து நாட்டுப் படகில் இலங்கைக்கு மூட்டைகளில் மஞ்சள் கடத்திச் செல்லப்பட்டது தெரிய வந்தது.

இந்நிலையில் இலங்கை புத்தளம் மாவட்டம் கற்பெட்டி பகுதியில், சந்தேகத்திற்குரிய வகையில் நின்ற நாட்டுப் படகை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். அப்போது நடத்தப்பட்ட சோதனையில் படகில் மரைக்காயர் பட்டினத்தில் இருந்து 62 மூட்டைகளில் கடத்தி வரப்பட்ட 2,100 கிலோ சமையல் மஞ்சள் இருந்ததால், அதனை படகுடன் பறிமுதல் செய்தனர். மேலும் மஞ்சளை படகில் கடத்தி வந்த 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்